உலகமே பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தை கொண்ட தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடந்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் ராம்கஞ்ச் மண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் மதன் திலாவர்.
இவர் அந்த மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை பஞ்சாயத்து ராஜ் மற்றும் சமஸ்கிருத கல்வித்துறையின் அமைச்சராக பொறுப்பு வகிக்கிறார். இந்நிலையில் காதலர் தினத்தன்று மாணவ மாணவிகளுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அமைச்சர் மதன் திலாவர். அந்த அறிவிப்பின்படி பிப்ரவரி 14ஆம் தேதியை தாய் தந்தையரை வணங்கும் நாளாக கொண்டாட வேண்டும் என யோசனை தெரிவித்துள்ளார்.
மேலும் ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய கல்வியாண்டிற்கான காலண்டரில் பிப்ரவரி 14ஆம் தேதி பெற்ற தாய் தந்தையை வணங்கும் நாள் என அச்சிட உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். உலகில் அனைவருக்கும் முக்கியமானவர்கள் தாய் தந்தையர் தான் எனவே பிப்ரவரி 14-ஆம் தேதி அவர்களை வணங்கி நமது அன்பை தாய் மற்றும் தந்தைக்கு தெரிவிக்க வேண்டும் என கூறியிருக்கிறார் அமைச்சர் மதன் திலாவர்.