fbpx

காலேஜ் சீனியருடன் காதல்! கர்ப்பம் கலைக்க முடியாததால் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு !

கருவை கலைக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்த காரணத்தால் வீட்டிற்கு பயந்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோட்டுப் பகுதியில் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கோபிசெட்டிபாளையம் நாயக்கன் காடு கண்ணகி வீதியைச் சார்ந்தவர் குமார் இவரது மனைவி மஞ்சுளா இந்த தம்பதியினரின் மகளான ஸ்வேதா கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார் இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி கல்லூரிக்கு சென்று விட்டு வருவதாக கூறிய ஸ்வேதா வீடு திரும்பாததால் பயந்த பெற்றோர் கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையில் இருந்தபோது கொங்கர் பாளையம் பகுதியில் உள்ள கிணற்றில் சாக்கு மூட்டையில் ஸ்வேதாவின் உடல் சடலமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணையில் இறங்கினர். காவல்துறையின் விசாரணையில் கொங்கர் பாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சார்ந்த வேருச்சாமி என்பவர் மகன் லோகேஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். காவல்துறையின் விசாரணையில் லோகேஷும் ஸ்வேதாவும் கல்லூரியில் படிக்கும் போது காதலித்து வந்தது தெரிய வந்துள்ளது. ஸ்வேதா முதலாம் ஆண்டு படிக்கும்போது மூன்றாம் ஆண்டு மாணவரான லோகேஷை காதலித்திருக்கிறார். லோகேஷ் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் தற்போது பணியாற்றி வருகிறார். இவர்களிருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததில் ஸ்வேதா கர்ப்பமாகியுள்ளார். கர்ப்பமான விஷயம் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் தெரிந்தால் மானமே போய்விடும் என பயந்த ஸ்வேதா லோகேஷை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அவரும் இது தொடர்பாக காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் சேர்ந்து கருக்கலைப்பு செய்ய முடிவெடுத்துள்ளனர். அதன்படி கடந்த 28ஆம் தேதி ஸ்வேதா கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு லோகேஷூடன் கோயம்புத்தூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்ய சென்று இருக்கிறார். அவர் நாலு மாதமா கர்ப்பமாக இருந்ததால் மருத்துவர்கள் கருக்கலைக்க முடியாது என தெரிவித்துள்ளனர். இதனால் பயந்து போயிருந்த ஸ்வேதாவை தனது பாட்டி வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார் லோகேஷ். பின்னர் ஸ்வேதாவிற்கு உணவு வாங்குவதற்காக லோகேஷ் வெளியே சென்ற நிலையில் தனது துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார் ஸ்வேதா. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த லோகேஷ் என்ன செய்வது என்று தெரியாமல் அவரது உடலை சாக்குப் பையில் வைத்து அங்கிருந்த கிணற்றில் வீசியிருக்கிறார். அவருடைய செல்போன் சிக்னலை வைத்து காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். முதலில் அவர் மீது பதியப்பட்ட கொலை வழக்கு பிரேத பரிசோதனை அறிக்கையில் தற்கொலை என வந்ததால் தற்போது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

Rupa

Next Post

"அந்த ஆபரேஷன் மட்டும் பண்ணவே முடியாது" 13 குழந்தைக்கு அப்பாவான நபர் அடம்! மாவட்ட அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை!

Sun Apr 2 , 2023
ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை பகுதியைச் சார்ந்த தம்பதியினருக்கு ஏழு ஆண் குழந்தைகள் ஐந்து பெண் குழந்தைகள் என மொத்தம் 12 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் அவர்களுக்கு 13 வதாக மூன்று கிலோ இடையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணிற்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். ஆனால் அந்தப் பெண்மணி உடல் பலகீனமாக இருப்பதோடு அவருக்கு இரத்த […]

You May Like