fbpx

பெண்ணை ஒரே ஒரு முறை மட்டுமே பின் தொடர்வது துன்புறுத்தல் ஆகாது!. மும்பை நீதிமன்றம் கருத்து!

Mumbai court: பெண்களை ஒரே ஒரு முறை மட்டுமே பின் தொடர்ந்ததால், அது துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் வராது என்று மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டம், கட்கா பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ்(19), கூலி தொழிலாளியான இவர், சிறுமியை ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளார். இதையடுத்து, கடந்த 2020 ஜனவரியில் சிறுமி ஆற்றுக்கு தண்ணீர் எடுத்து வர சென்ற போது, அவரை ஆகாஷ் பின் தொடர்ந்து சென்றுள்ளார். அதன் பின் 2020 ஆகஸ்ட் 26 அன்று சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து, ஆகாஷ் தன் நண்பன் அமித், 19, என்பவருடன் சேர்ந்து சிறுமியின் வீட்டிற்கு சென்றார். நண்பன் அமித்தை வெளியே நிறுத்திவிட்டு, உள்ளே சென்ற ஆகாஷ் சிறுமியின் வாயை அடைத்து தகாத இடங்களில் தொட்டு தொல்லை தந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசில் புகாரளிக்கப்பட்டது. அவர்கள் போக்சோ மற்றும் சிறுமியை பின் தொடர்ந்து சென்று துன்புறுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த அகோலா விசாரணை நீதிமன்றம், கடந்த 2022ல் இரு வாலிபர்களுக்கும் ஏழாண்டு சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து இருவரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு நீதிபதி சனாப் முன் விசாரணைக்கு வந்தது. அவர், முதல் குற்றவாளியான ஆகாஷின் தண்டனையை உறுதி செய்தார். இளம் வயது காரணமாக அவரின் சிறை தண்டனை காலத்தை பாதியாக குறைத்தார். இரண்டாவது குற்றவாளி நேரடியாக குற்றம் செய்யாமல், வெளியே நின்றதால் அவரை விடுவித்தார்.

மேலும், ‘இந்த வழக்கில் ஒரே ஒரு முறை மட்டுமே குற்றவாளி சிறுமியை பின் தொடர்ந்ததால், அது துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் வராது. நேரடியாகவோ அல்லது, ‘டிஜிட்டல்’ உபகரணங்கள் வாயிலாகவோ துன்புறுத்தியதற்கு ஆதாரம் இருந்தால் மட்டுமே இந்த சட்டப் பிரிவு பொருந்தும்’ என கூறி வழக்கில் இருந்து அந்த பிரிவை நீக்கினார்.

Readmore: தடுமாற்றம்..!! என்ன ஆச்சு விஷாலுக்கு..? வெளியான பரபரப்பு தகவல்..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

English Summary

Following a woman just once does not constitute harassment, says Mumbai court

Kokila

Next Post

முதல்வர் நிகழ்ச்சியில் வெடித்த சர்ச்சை..!! கருப்பு நிற துப்பட்டாவை வாங்கி வைத்தது ஏன்..? காவல்துறை பரபரப்பு விளக்கம்..!!

Mon Jan 6 , 2025
They bought the dupatta from a person wearing a black dupatta. This action occurred because the police officers on duty there acted with excessive caution.

You May Like