fbpx

இறால் மீன் விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்.? மறந்தும் இந்த உணவுகளை அவற்றுடன் சேர்த்து சாப்பிடாதீர்கள்.!

மீன்கள் சாப்பிடுவது அனைவருக்கும் விருப்பமான ஒன்று. அதிலும் இறால் மீனின் சுவை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். எனினும் இந்த மீன்களுடன் சில உணவுப் பொருட்களையும் சேர்த்து சாப்பிடும் போது அது நம் உடலுக்கே ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இறால் மீன் சாப்பிடும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

இறால் மீன்களுடன் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில் பாலில் இருக்கக்கூடிய அதிகப்படியான கால்சியம் இறாலில் இருக்கும் புரதங்களுடன் வினைபுரிந்து செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் இதனைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இறால் மீன்களுடன் அதிக காரமான உணவுகளையும் சாப்பிட வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இறால் மீன்களுடன் அதிகமான காரமுள்ள உணவுகள் சேரும்போது அவை வயிற்றுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கின்றனர்.

இறால் மீன்களுடன் கீரை போன்ற இரும்பு சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இறால் மீன்களில் ஏராளமான இரும்புச்சத்து இருக்கிறது. இவற்றுடன் கீரை போன்ற இரும்புச் சத்து அதிகம் நிறைந்த பொருட்கள் சேரும் போது உடலில் அளவுக்கு அதிகமான இரும்புச்சத்து உருவாகும். இது பின் விளைவுகளை ஏற்படுத்தும். இறால் மீன்களை சாப்பிடும் போது சிட்ரஸ் பழங்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அந்தப் பழங்களில் இருக்கும் அதிகப்படியான அமிலத்தன்மை இறால்களின் புரதங்களுடன் இணைந்து நம் உடலுக்கு தீய விளைவுகளை ஏற்படுத்த கூடும். எனவே இறாலுடன் அதிக சிட்ரஸ் பழங்களை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Next Post

40 வயதிற்கு மேல் கொலஸ்ட்ரால் பயமா.? உங்களுக்காக சில டிப்ஸ்.!

Fri Dec 22 , 2023
நம் உடலில் இருக்கக்கூடிய பல பிரச்சினைகளுக்கும் நோய்களுக்கும் முக்கிய காரணமாக அமைவது கெட்ட கொழுப்புகள். மாரடைப்பிற்கு உடலில் கொழுப்புகள் சேருவதே முக்கிய காரணமாக அமைகிறது. மேலும் இவற்றால் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளும் உருவாகிறது. குறிப்பாக 40 வயதிற்கு மேல் கெட்ட கொழுப்புகளை தவிர்ப்பதும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுவதும் அவசியமாகிறது. இதன் மூலம் நமது ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் இதய நோய் போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை தற்காத்துக் […]

You May Like