மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உடலில் அதிகமாக இருக்கும் கொழுப்பின் அளவு தான். நமது உடலில் கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கும் போது மாரடைப்பு மட்டும் இல்லாமல், பக்கவாதம் மற்றும் பல இருதய சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் முடிந்த வரை நமது உடலில் உள்ள கொழுப்புச் சத்தை கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.
இதற்காக மருத்துவரிடம் செல்லும் போது கலர் கலராக பல மாத்திரைகளை கொடுப்பது உண்டு. அந்த மாத்திரைகள் கொழுப்பின் அளவை கட்டுகள் வைத்திருக்க உதவினாலும் கூட, இயற்கையாக நமது உணவை மருந்தாக எடுத்துக்கொண்டால் எந்த பக்கவிளைவுகளும் இல்லாமல் நம்மால் கொழுப்புச் சத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
அந்த வகையில், எப்படி இயற்கையான முறையில் கொழுப்பைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துக் கொள்ளுங்கள். அந்த வகையில், இந்த பட்டியலில் முதல் இடத்தில இருப்பது ஓட்ஸ் தான். இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம். இதனால், நமது உணவில் அடிக்கடி ஓட்ஸ் எடுத்துக்கொள்வதால் கொழுப்புச் சத்தை நாம் கட்டுக்குள் வைக்க முடியும்.
அனைவரின் வீடுகளில் இருக்கும் பூண்டு இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவும். பல மருத்துவ குணங்களைக் கொண்ட பூண்டு, உடலில் உள்ள கொழுப்புச்சத்தின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். இதனால் தினமும் 2 பல் பூண்டு சாப்பிடுவது நல்லது. இல்லையென்றால், உங்கள் உணவில் அடிக்கடி பூண்டு சேர்த்துக்கொள்ளலாம்.
ஆண்டிஆக்சிடெண்டுகள், குறிப்பாக பாலிபினால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் அதிகம் நிறைந்த ஒரு பழம் என்றால் அது மாதுளை தான். மாதுளை சாறு கொழுப்பைக் குறைத்து இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும், கொழுப்பை கட்டுப்படுத்த கேரட் மிகவும் உதவும். உங்களுக்கு விருப்பமானால் கேரட்டை பச்சையாக சாப்பிடலாம். இது கூடுதல் பலனை அளிக்கும்.
Read more: சளி அதிகமா இருக்கா? அப்போ எலுமிச்சை ஜூஸ் குடிங்க, சீக்கிரம் குணமாகும்..