fbpx

பொதுமக்கள் கவனத்திற்கு.. சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டியை உயர்த்திய மத்திய அரசு… விவரம் உள்ளே…

அடுத்த காலாண்டில் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது..

சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சிறு நேமிப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.. இந்த சிறுசேமிப்பு திட்டங்கள் தான் நடுத்தர மக்களின் பிரதான முதலீடாக உள்ளது. குழந்தைகள், படிப்பு செலவு, திருமண செலவு என பல்வேறு எதிர்கால செலவினங்களுக்காக ம்க்கள் இந்த சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர்.. இந்த சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டு அடிப்படையில் நிதி அமைச்சகத்தால் மதிப்பாய்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

அந்த வகையில் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.. அடுத்த காலாண்டில், அதாவது அக்டோபர்-டிசம்பர் 2022 வரை சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை 10 முதல் 30 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்க நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 4 வருட இடைவெளிக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்ட சிறு சேமிப்பு திட்டங்களின் பட்டியல்

  • மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதம் 20 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டு 7.6% ஆக உள்ளது
  • கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின் வட்டி விகிதம் 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 7% ஆக உள்ளது.
  • 3 ஆண்டு கால அஞ்சலக நேர வைப்புத்தொகையின் வட்டி விகிதம் 30 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டு 5.8% ஆகவும், 2 ஆண்டு காலம் 20 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டு ஆக 5.7% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

எனினும் பிபிஎஃப் (PPF) மற்றும் சுகன்யா சம்ரிதி யோஜனா வட்டி விகிதங்கள் மாறாமல் வைக்கப்பட்டுள்ளன. கடைசியாக 2018ல் இந்த திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Maha

Next Post

ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினர் வசிக்கும் பகுதியில்; தற்கொலைப்படை தாக்குதல்...19 பேர் உயிரிழப்பு..!!

Fri Sep 30 , 2022
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருக்கும் ஷியைட் பகுதியில் இன்று நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 27 பேர் காயமடைந்து உள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரான் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகமாக கருதப்படும் ஷியைட் இன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. கடந்த வருடம் ஆப்கானிஸ்தானை, தலிபான்கள் கைப்பற்றினர். அதில் இருந்து அவர்களுக்கு போட்டியாக நினைக்கும் […]

You May Like