அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இங்கிலாந்து நாட்டில் உள்ள பார்க்லே வங்கியில் 1,04,93,000 அமெரிக்க டாலரை முறையீடாக முதலீடு செய்திருக்கிறார் என்று புகார் எழுந்தது இது குறித்து அவர் மீது அமலாகத் துறை வழக்குப் பதிவு செய்தது.
இதுகுறித்து டிடிவி தினகரன் மீது மேலும் 7 வழக்குகள் தொடரப்பட்டனர். இதனை அடுத்து அன்னிய செலாவணி மோசடி வழக்கு குறித்த ஆவணங்களை தனக்கு வழங்க வேண்டும் என்று அமலாக்க துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறிய வழக்கில் டிடிவி தினகரனுக்கு ஆவணங்களை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், அந்த உத்தரவை எதிர்க்கும் விதமாக, அமலாக்கத்துறை சார்பாக டெல்லி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது அமலாக்க துறையின் மாதங்களை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், ஆவணங்களில் இருக்கக்கூடிய தகவல்களை தாங்கள் பார்க்க விரும்புவதாக தெரிவித்தனர்.
ஆகவே இந்த வழக்கின் விசாரணை குறித்த விபரங்களை சீல் இடப்பட்ட கவரில் 3ல் வாரத்திற்குள்ளாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து, அடுத்த விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.