அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை எம்பியுமான சி.வி.சண்முகம் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை எம்பியுமான சி.வி.சண்முகம் கடந்த மாதம் 22ஆம் தேதி இரவு, இதய சிகிச்சை தொடர்பாக அப்போல்லோ மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார், மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பிறகு 23ஆம் தேதி வீடு திரும்பினார். இந்நிலையில் தற்போது சி.வி.சண்முகம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக தொண்டரான சி.வி.சண்முகம், இதற்கு முன் 2001 மற்றும் 2006 தேர்தல்களில் திண்டிவனம் தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் . முதல்வர் ஜெயலலிதா தலைமையில் 2003 முதல் 2006 வரையிலும், 2011 முதல் 2013 வரை மாநிலத்தின் கல்வி, சட்டம் மற்றும் வணிக வரி அமைச்சராகவும் பணியாற்றினார் . கட்சியின் மாவட்ட செயலாளராக 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். 2016 தேர்தலில் மீண்டும் விழுப்புரம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2017ல் மீண்டும் அதிமுகவின் விழுப்புரம் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த சட்டசபை தேர்தலில் சிவி.சண்முகம் மீண்டும் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டார், ஆனால் தோல்வியை சந்தித்தார். அதன்பிறகு தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக (ராஜ்யசபா) பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.