fbpx

“இது புது மாதிரி திருட்டா இருக்கே”??? சிறுதொழில் அதிபர்களை குறிவைத்த நைஜீரிய கும்பல்! மும்பையில் மடக்கி பிடித்த போலீஸ்!

சென்னையைச் சார்ந்த தொழிலதிபரிடம் லிங்க்டு சமூக வலைதளத்தின் மூலமாக 34 லட்ச ரூபாய் மோசடி செய்த நைஜீரிய நாட்டு கும்பலை காவல்துறை கைது செய்திருக்கிறது. சென்னை கொளத்தூரைச் சார்ந்தவர் விஜய். இவர் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்து வந்தார். லிங்க்டு சமூக வலைதளம் மூலமாக இவரை தொடர்பு கொண்ட நோரா என்ற பெண் சென்னை கனடாவிலிருந்து பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டார். கனடாவில் மருத்துவ துறையில் ஏராளமான மூலிகைகள் தேவை இருப்பதாக கூறியவர் தனக்கு ஏற்றுமதி செய்து தருமாறு கேட்டுக் கொண்டார். புற்றுநோய்க்கான ஒரு மூலிகை எண்ணெய் டெல்லியில் இருப்பதாகவும் அதன் விலை ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரும் எனவும் தனக்கதை வாங்கி ஏற்றுமதி செய்யுமாறு கூறியிருக்கிறார்.

இவரது பேச்சை நம்பிய விஜய் டெல்லியிலிருக்கும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு அவர் கூறிய அந்த எண்ணையை ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார் பின்னர் வெளிநாட்டிலிருந்து வந்த பெண் ஒருவர் சென்னை வந்து அந்த எண்ணெய் ஒரிஜினல் தானா? என பரிசோதனை செய்துவிட்டு சென்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்து விஜயை தொடர்பு கொண்ட நோரா 18 லிட்டர் ஆயில் வாங்கி தனக்கு ஏற்றுமதி செய்யுமாறு கூறியிருக்கிறார். இவரது பேச்சை நம்பிய விஜய் 34 லட்ச ரூபாய் அந்த நிறுவனத்தின் வங்கி கணக்கில் செலுத்தியிருக்கிறார். அதன்பிறகு மொத்த கும்பலும் தலைமறைவாகியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விஜய் இது தொடர்பாக காவல்துறையிடம் புகாரளித்தார். காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் மும்பையில் தங்கியிருந்து செயல்படும் நான்கு பேர் கொண்ட நைஜீரிய கும்பல் தான் இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கிறது என கண்டுபிடித்தனர். அவர்களை கைது செய்து அவர்களிடம் தீவிரமான விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Rupa

Next Post

"வசீகரா......"! பாடலை பாடிய பிரபல திரைப்பட பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு திடீர் விபத்து! லண்டனில் அறுவை சிகிச்சை!

Fri Mar 24 , 2023
தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சிறந்த பின்னணி பாடகியாக விளங்கி வருபவர் பாம்பே ஜெயஸ்ரீ. மின்னலே படத்தில் இடம் பெற்ற வசீகரா என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இவர். இளையராஜா ஏ ஆர் ரகுமான் ஹாரிஸ் ஜெயராஜ் என தமிழ் சினிமாவின் முன்னாடியே இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை பாடியிருந்தாலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தான் இவர் அதிகமான […]

You May Like