fbpx

4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை…! காங்கிரஸ் பாஜக எத்தனை மாநிலத்தில் முன்னிலை…?

4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தெலங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் பாஜக முன்னிலை வகிக்கிறது. சத்தீஸ்கரில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு படிப்படியாக முன்னிலை நிலவரம் வெளியாகி வருகிறது.

அதன்படி, தெலங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் பாஜக முன்னிலை வகிக்கிறது. சத்தீஸ்கரில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. தெலுங்கானா முதலமைச்சர் சந்திசேகர் ராவ் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் பின்னடைவை சந்தித்துள்ளார். இதில் கஜ்வெல் தொகுதியில் பாஜகவின் மூத்த தலைவர் எட்டலா ராஜேந்தர் சந்திரசேகர் ராவுக்கு எதிராக போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி போட்டி இட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்க.

Vignesh

Next Post

டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்களா நீங்கள்?… இவங்ககிட்ட உஷாரா இருக்கணும்!

Sun Dec 3 , 2023
நாம் பிறக்கும் நாள், தேதி, நம்முடைய பிறந்த ராசி என அனைத்தும் நம் ஆளுமையில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் ஒருவரின் பிறந்த மாதமும் அவர்களின் ஆளுமையை நிர்ணயிக்கும் ஒன்றாக இருக்கிறது. டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் அவர்களின் நேர்மறை மற்றும் எதிர்மறை குணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம். டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்களிடம் நீங்கள் காணும் பொதுவான குணங்களில் ஒன்று பணிவாகும். இவர்கள் வெற்றியை ஒருபோதும் […]

You May Like