fbpx

பெற்றோர்கள் கவனத்திற்கு…! RTE திட்டத்தின் கீழ் தனியார் பள்ளியில் இலவச மாணவர் சேர்க்கை…!

தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ திட்டத்தில் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு அடுத்த வாரத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். மாநிலம் முழுவதுள்ள 8 ஆயிரத்துக்கும் மேலான தனியார் பள்ளிகளில் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம்.

குழந்தைகளுக்கான இலவச மற்றும்‌ கட்டாய கல்வி உரிமைச்‌சட்டம்‌ 2009இன்‌ படி 2025-26ஆம்‌ கல்வி ஆண்டில்‌ 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டின்‌ கீழ்‌ வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்‌ நலிவடைந்த பிரிவினரின்‌ குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார்‌ சுயநிதி பள்ளிகளில்‌ எல்கேஜி வகுப்பிலும்‌, 1-ம்‌ வகுப்பு முதல்‌ நடைபெற்று வரும்‌ பள்ளிகளில்‌ மாணவர் சேர்க்கைக்கு rte.tnschool.gov.in என்ற இணையதளம்‌ மூலம்‌ அடுத்த வாரத்தில் இருந்து விண்ணப்பங்கள் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் வருமானம், இருப்பிடம், சாதிச் சான்றிதழ்களை சமர்ப்பிப்பது அவசியம். எனவே, சேர்க்கைக்கு தேவையான ஆவணங்களை முன்கூட்டியே தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். 3-ம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகள், துப்புரவு தொழிலாளர்கள் ஆகியோரது குழந்தைகளின் விண்ணப்பங்கள் குலுக்கல் நடத்தாமல் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

English Summary

Free admission to private schools under RTE scheme

Vignesh

Next Post

இந்தியாவுக்கு பேரழிவு!. பூகம்பத்தை எதிர்கொள்ளும் அபாயம்!. விஞ்ஞானிகள் எச்சரிக்கை!. பூமிக்கு அடியில் என்ன நடக்கிறது?

Wed Apr 16 , 2025
Disaster for India!. Risk of facing an earthquake!. Scientists warn!. What is happening underground?

You May Like