தமிழக அரசு பெண்களுக்கு இலவச பேருந்து அறிவித்ததை போல ஆண்களுக்கும் வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாக இடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்; தமிழகத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. சாலையில் நடந்து சென்றவர்கள் தற்போது 75 சதவீதம் பேர் கார்களில் பயணம் செய்கின்றனர். நடந்து செல்பவர்களின் எண்ணிக்கை 25 சதவீதமாக குறைந்துள்ளது. தமிழக அரசு பெண்களுக்கு இலவச பேருந்து அறிவித்ததை போல ஆண்களுக்கும் வழங்க வேண்டும். மற்ற நாடுகளை போன்று தமிழகத்தில் பசுமை பூங்காக்கள் உருவாக்க வேண்டும்.