fbpx

சூப்பர் சான்ஸ்..! TNUSRB-SI தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு…! ஆர்வம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…!

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட உள்ள TNUSRB-SI தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின் படி நேரடியாக நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 16.04.2025 அன்று மதியம் 2.30 மணியளவில் துவங்கப்பட உள்ளது. எழுத்துத் தேர்வு முடிந்தவுடன் உடற்தகுதி தேர்வுக்கான பயிற்சியும் வழங்கப்படவுள்ளது.

நமது தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக நடத்தப்பட்ட தமிழ்நாடு சீருடைப் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பில் பயின்ற மாணவர்கள், 2021-2022 ஆம் ஆண்டு வெளியான தேர்வு முடிவுகளில் TNUSRB PC தேர்வில் 24 நபர்களும், TNUSRB SI தேர்வில் 5 நபர்களும், 2022-2023 ஆம் ஆண்டு வெளியான தேர்வு முடிவுகளில் TNUSRB PC தேர்வில் 17 நபர்களும், TNUSRB SI தேர்வில் 5 நபர்களும், 2023-2024 ஆம் ஆண்டு வெளியான தேர்வு முடிவுகளில் TNUSRB PC தேர்வில் 22 நபர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை 04286-222260 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது onlineclassnkl@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டோ தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுயவிவரத்தினை பதிவு செய்து பயன் பெறலாம். இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மனுதாரர்கள் 2-Passport size புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வரவேண்டும்.

http://tamilnaducareerservice.tn.gov.in என்ற இணையதளத்தில் காணொளி வழி கற்றல், வாயிலாகவும், மாதிரி தேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இவ்விணையதளத்தில் பாடக்குறிப்புகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்யலாம், மாதிரி தேர்வுக்கான பகுதியும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரையும், மாலை 7.00 மணி முதல் 9.00 மணி வரையும் போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிப்பரப்பப்படுகிறது. மேலும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் TN Career Services Employment youtube channel வாயிலாகவும் போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிப்பரப்பப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Free coaching class for TNUSRB-SI exam…! Interested candidates apply immediately

Vignesh

Next Post

மியான்மரை மீண்டும் தாக்கிய வலுவான நிலநடுக்கம்!. ரிக்டர் அளவில் 5.1ஆக பதிவு!. வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!

Sun Apr 13 , 2025
A strong earthquake struck Myanmar again!. 5.1 on the Richter scale!. People fled their homes!

You May Like