fbpx

2025-26 கல்வி ஆண்டு: 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்..! பட்டியல் அனுப்ப உத்தரவு…!

வரும் கல்வியாண்டின்(2025-26) முதல் பருவத்தில் இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்குவதற்கான உத்தேச தேவைப் பட்டியல் எமிஸ் தளத்தின் மூலம் பெறப்பட்டு, மாணவர்கள் எண்ணிக்கை விவரம் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்துக்கு வழங்கப்பட உள்ளது என பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; தமிழகத்தில் 2012-13-ம் கல்வியாண்டு முதல் அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வரும் கல்வியாண்டின்(2025-26) முதல் பருவத்தில் இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்குவதற்கான உத்தேச தேவைப் பட்டியல் எமிஸ் தளத்தின் மூலம் பெறப்பட்டு, மாணவர்கள் எண்ணிக்கை விவரம் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்துக்கு வழங்கப்பட உள்ளது.

எனவே, தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களின் விவரங்களும் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பது சம்பந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் மாவட்டக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Free notebook for students of classes 1 to 8

Vignesh

Next Post

டிரம்ப் ஹோட்டல் முன் வெடித்து சிதறிய டெஸ்லாவின் சைபர் டிரக்.. ஒருவர் பலி.. தீவிரவாத தொடர்பா?

Thu Jan 2 , 2025
Firework mortars inside Tesla that exploded outside Trump's Las Vegas hotel

You May Like