விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நாளை குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; நாமக்கல் மாவட்ட ஆகஸ்ட் 2024-ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 30.08.2024 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணிக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
நாமக்கல் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை மூலமாக வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு தொடர்பான மாவட்ட அளவிலான மேளா கண்காட்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாளகத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் வருகின்ற 30.08.2024 அன்று காலை 9.00 மணி முதல் 5.00 மணி வரை நடைபெற உள்ளது. இந்த மேளாவில் மஹேந்திரா, ஜான்டீர், நியூ ஹாலண்ட், சுராஜ், வி.எஸ்.டி (VST), கிர்லாஸ்கர் மற்றும் முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு டிராக்டர், பவர் டில்லர், பவர்வீடர் ரோட்டோவேட்டர் முதலிய கருவிகளின் கண்காட்சியும் அமைக்கப்பட உள்ளது.
இம்மேளாவில் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்பப் பணியாளர்களைக் கொண்டு இயந்திரங்கள் இலவசமாக (லேபர் சார்ஜ் மட்டும் இலவசமாக) சர்வீஸ் செய்து தரப்படும். மேற்கண்ட, மேளா மற்றும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.