ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின்கீழ் நாட்டில் உள்ள 12.37 கோடி குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 55 கோடி பயனாளிகளுக்கு இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவ சிகிச்சைக்காக ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
2024, அக்டோபர் 29 அன்று, 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும், அவர்களின் சமூக-பொருளாதார நிலையைக் கருத்தில் கொள்ளாமல், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பலன்களை வழங்குவதற்காக ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தை அரசு விரிவுபடுத்தியது.
70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து தகுதியான மூத்த குடிமக்களையும் பதிவு செய்வது என்பது விண்ணப்பம் அடிப்படையிலான செயல்முறையாகும். மொபைல் போன் பயன்பாடு (ஆயுஷ்மான் செயலி), இணையதளம் (beneficiary.nha.gov.in) அல்லது அருகிலுள்ள சேவைக்காக பதிவு செய்யப்பட்ட மருத்துவமனை அல்லது பொது சேவை மையத்தில் பதிவு செய்யலாம். சுய பதிவு செய்யும் அம்சமும் விண்ணப்பப் படிவத்தில் உள்ளது.
பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு மருத்துவம், இருதய சிகிச்சை, புற்றுநோயியல் போன்ற 27 சிறப்புப் பிரிவுகளில் 1,961 சிகிச்சை முறைகளுக்கு இணையாக, இரண்டாம் நிலை மற்றும் உயர்நிலை மருத்துவ மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு ஒவ்வொரு தகுதியான பயனாளி குடும்பத்திற்கும் ஆண்டொன்றுக்கு ரூ.5 இலட்சம் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆயுஷ்மான் முதியோர் திட்ட அட்டை பயனாளிகளுக்கான 1800-110-770 என்ற உதவி எண் மூலம் அவர்கள் மிஸ்டு கால் கொடுக்கலாம் அல்லது பயனாளி ஏதேனும் உதவிக்கு அல்லது கேள்விகளுக்கு 24×7 அழைப்பு மையத்தை 14555 என்ற எண்ணில் அழைக்கலாம்.