நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வீடுகள் தோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டுமென பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். அந்த வகையில் தமிழகத்தில் இல்லம் தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அக்கடிதத்தில், ‘2022 ஆகஸ்டு 13 முதல் 15-ம் தேதி வரை தமிழகத்திலுள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றி தேசப்பற்றை வெளிப்படுத்தவும், 75வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை சிறப்பிக்க வேண்டும்.
அனைத்து மாணவர்களுக்கும் இதனை தெரிவித்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து வகைப் பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.