தமிழ்நாட்டில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்த திட்டமிட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டு தோறும் இரண்டு முறை சுங்கச்சாவடி கட்டணத்தை மாற்றி அமைத்து வருகிறது. அதன்படி முதன்மை சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதமும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் தமிழ்நாட்டில் 36 சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் ரூ.5 முதல் ரூ.30 வரை உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள விக்கிரவாண்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளின் சுங்கக் கட்டணம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 7% வரை உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் வகையைப் பொறுத்து ஒரு பயணத்திற்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.150 வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.