fbpx

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி…! மேட்டூர் அணையிலிருந்து இன்று முதல்…! முதல்வர் உத்தரவு

டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களைக் காத்திட மேட்டூர் அணையிலிருந்து இன்று முதல் இரண்டு TMC தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவ மழைப்பொழிவு குறைவாகப் பெய்த காரணத்தாலும், காவிரி நதிநீர்ப் பற்றாக்குறையாலும், டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடக் கோரி விவசாயப் பெருமக்களிடமிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை வைத்தனர்.

அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் சம்பா நெற்பயிரின் நிலையினை அறிந்திட தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், கிராம அளவில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு, 298 கிராமங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் 4,715 ஏக்கரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18,059 ஏக்கரும், என மொத்தம் 22,774 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாசன நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என அறியப்பட்டுள்ளது.

எனவே, விவசாயப் பெருமக்களின் நலன் கருதி நெற்பயிரினைக் காத்திட, மேட்டூர் அணையிலிருந்து இரண்டு TMC தண்ணீரை இன்று முதல் திறந்துவிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். எனவே, விவசாயப் பெருமக்கள் இப்பாசன நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி சம்பா நெற்பயிரைப் பாதுகாத்து பயன்பெறுமாறு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

அசத்தல்..! "பாரத் அரிசி" முதலில் மூன்று மத்திய கூட்டுறவு நிறுவனங்களின் மொபைல் வேன்கள் மூலம் விற்பனை...!

Sat Feb 3 , 2024
அரிசி மற்றும் நெல் கையிருப்பைத் தெரிவிப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இது குறித்து மத்திய உணவு பாதுகாப்பு அமைச்சகம் தனது செய்தி குறிப்பில்; ஒட்டுமொத்த உணவுப் பணவீக்கத்தை நிர்வகிப்பதற்கும், நேர்மையற்ற ஊக வணிகத்தைத் தடுப்பதற்கும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள வர்த்தகர்கள் / மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், பல இடங்களில் கடைகள் வைத்திருக்கும் பெரிய விற்பனையாளர்கள் மற்றும் பதப்படுத்துபவர்கள், ஆலை உரிமையாளர்கள் ஆகியோருக்கு மறு உத்தரவு […]

You May Like