fbpx

“இந்த பழங்கள் சாப்பிடுங்க…” கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் அற்புத பழங்கள்.!

கல்லீரல் நமது உடலில் இருக்கக்கூடிய மிக முக்கியமான ஒரு உறுப்பு. இது நச்சு நீக்கம், ஊட்டச்சத்து சேமிப்பு மற்றும் வளர்ச்சிதை மாற்றம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது உடலின் சமநிலை சீராக இருப்பதற்கு கல்லீரலில் ஆரோக்கியம் மிகவும் அவசியம். இந்த கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு ஐந்து பழங்கள் உதவி புரிகின்றன. அவை எந்த பழங்கள் என்று இந்த பதிவில் பார்ப்போம் .

திராட்சை பழம் கல்லீரல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வைக்கிறது. இதில் இருக்கக்கூடிய சில ஆக்சிஜனேற்றம் மூலக்கூறுகள் கல்லீரல் வீக்கத்தை எதிர்த்துப் போராடவும் பாக்டீரிய தொற்றுக்களில் இருந்தும் நம் கல்லீரலை பாதுகாக்கின்றது. ராஜ பலன்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.

ஆப்பிள் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய மற்றொரு சிறந்த உணவாகும். இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து கல்லீரலின் கொழுப்புச் சத்துக்களை கட்டுப்படுத்துகிறது. மேலும் உடலின் நச்சு நீக்கும் செயலையும் எளிதாக்குகிறது. ஆப்பிள் செரிமானத்தை சீராக்குவதால் கல்லீரலின் வளர்ச்சியை மாற்ற பணியும் எளிமையாகிறது. இதன் காரணமாக கல்லீரல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு உதவுகிறது.

அவகாடோ பழங்கள் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவும் மற்றொரு பழமாகும். இந்தப் படத்தில் ஏராளமான நல்ல கொழுப்பு சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இவை கல்லீரலை ஒரு கேடயம் போல பாதுகாக்கிறது. மேலும் இந்த பணத்தில் இருக்கக்கூடிய நார்ச்சத்தும் கல்லீரல் நலனில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை கல்லீரலுக்கு உதவுவதோடு இதயத்தில் நான் உன்னை பாதுகாப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. இந்தப் பழங்கள் தவிர ஆன்டிஆக்சிடென்ட்கள் நிறைந்து இருக்கும் பெர்ரி வகை பழங்களும் கல்லீரல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Kathir

Next Post

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி...! அடுத்த 3 நாள் பலத்த மழை....!

Wed Nov 22 , 2023
குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, […]
புயலுக்கு நடுவே பூக்களாய் மலர்ந்த 270 குழந்தைகள்..!! மாவட்ட ஆட்சியர் சொன்ன குட் நியூஸ்..!!

You May Like