fbpx

#திண்டுக்கல் : பெற்றோர்கள் செல்போன் வாங்கித்தர மறுத்ததால் விரக்தியடைந்த மாணவன் பூச்சி மருந்து குடித்து இறந்த சம்பவம்..!

திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள ஓட்டுப்பட்டியில் விவசாயியான சிங்காரம் தனது மகன் யோகபிரபு(17) . மகன் மைக்கேல் பாளையம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார். 

இதனிடையில் யோக பிரபு தனது பெற்றோரிடம் செல்போன் வாங்கி தருமாறு தொடர்ந்து கேட்டு அடம்பிடித்துள்ளார். இந்த நிலையில் பெற்றோர்கள் செல்போன் வாங்கித்தர மறுத்ததால் சில நாட்களாக யோகபிரபு மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். 

இதனா‌ல் விரக்தியடைந்த அவர் சென்ற 15ஆம் தேதி தனது தோட்டத்தில் பூச்சி மருந்தை அறுந்திவிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இந்த நிலையில் மயங்கிய கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி மாணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தந்தை சிங்காரம் அளித்த புகாரின் அடிப்படையில்  காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.

Rupa

Next Post

வாசனை திரவியங்களில் மனித சிறுநீர் கலப்பு..!! வசமாக சிக்கிய பிரபல தொழிலதிபர்..!! அதிர்ச்சி தகவல்

Mon Dec 19 , 2022
வாசனை திரவியங்களில் மனித சிறுநீர் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இதனை தயாரித்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டார். சில ரூபாய்களை மிச்சப்படுத்துவதற்காக மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து வாசனை திரவியங்களை அடிக்கடி வாங்குகிறோம். இந்நிலையில், ஒரு தொழிலதிபர் வாசனை திரவியங்களை மொத்த விலையில் விற்பனை செய்து, பெரும் வருமானம் ஈட்டிய சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால், அவரது வாசனை திரவியத்தின் உண்மைத்தன்மை தெரிந்தால் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. விலையுயர்ந்த வாசனை […]
வாசனை திரவியங்களில் மனித சிறுநீர் கலப்பு..!! வசமாக சிக்கிய பிரபல தொழிலதிபர்..!! அதிர்ச்சி தகவல்

You May Like