fbpx

அதிரடி…! பாஸ்மதி அரிசிக்கான தரத்தை நிர்ணயம் செய்ய FSSAI முடிவு…! ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும்…!

பாஸ்மதி அரிசிக்கான தரத்தை நிர்ணயம் செய்ய FSSAI முடிவு 2023 ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது .

நாட்டிலேயே முதன் முறையாக பாஸ்மதி அரசிக்கு தரத்தை நிர்ணயம் செய்ய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் முன்வந்துள்ளது. இதற்காக உணவு தரம் மற்றும் பாதுகாப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த விதியின்படி, இயற்கை நறுமணம் கொண்ட பாஸ்மதி அரிசி மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

அதே நேரத்தில் செயற்கை நிறமூட்டுதல், பாலிஷ் செய்தல், செயற்கையாக மண மூட்டுதல் ஆகியவற்றுக்கு அனுமதியில்லை. மேலும் பாஸ்மதி அரிசியின் சராசரி அளவு, அனுமதிக்கப்படும் அதிகப்பட்ச ஈரப்பதம் உள்ளிட்ட இதர குணாதிசயங்களுக்கும் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பாஸ்மதி வர்த்தகத்தில் வெளிப்படை தன்மையை கொண்டு வரவேண்டும் என்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச நுகர்வோரின் எதிர்ப்பார்பை பூர்த்தி செய்யும் வகையில், பாஸ்மதி அரிசிக்கு தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் இமய மலைப்பகுதிகளில் விளையும் முதன்மை ரக பாஸ்மதி அரிசிக்கு அதன் அளவே பிரதானம். அதுமட்டுமல்லாமல், மிருதுவான தன்மை, தனித்துவம் வாய்ந்த நறுமணம், சுவை ஆகியவையே இந்த அரிசி பிரபலமைடைந்ததற்கான காரணிகளாகும். பாசுமதி அரிசியின் தரத்திற்காகவே உலக நாடுகளில் நுகரப்படும் பாசுமதி அரிசியில் மூன்றில் இரண்டு பங்கை இந்தியா ஆக்கிரமித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தையில் தரமான பாரம்பரிய பாஸ்மதி அரிசியை விநியோகம் செய்ய ஏதுவாக, பாசுமதி அரிசிக்கு தரத்தை நிர்ணயம் செய்ய FSSAI முன்வந்துள்ளது. பாஸ்மதி அரிசிக்கான தரத்தை நிர்ணயம் செய்ய FSSAI முடிவு 2023 ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது .

Vignesh

Next Post

எதை சாப்பிட்டாலும் ஒல்லியாவே இருக்கிறீர்களா?… இதை மட்டும் 10 நாள் ட்ரை பண்ணுங்க!

Mon Jul 31 , 2023
நவீன காலத்திற்கேற்ப மக்கள் சரிவர உணவு உண்ணாமல் உடல் மெலிந்து ஒல்லியாவே காணப்படுகின்றனர். மேலும் அதிக மக்கள் உணவு சத்தான உணவு உண்ணாமலும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளாமலும் இருக்கிறார்கள். அவர்கள் வேகமாக உடல் மெலிந்து எடை குறைந்து காணப்படுகிறது. உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்றால் புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் முக்கியமான ஒன்று முட்டைகளை அதிகமாக உண்பதால் உடல் எடை அதிகரிக்கிறது. […]

You May Like