fbpx

தூள்…! 50 வயதை கடந்த ஆசிரியர்களுக்கு ரூ.1000 செலவில் முழு உடல் பரிசோதனை…! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!

50 வயதை கடந்த ஆசிரியர்களுக்கு `மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.1,000 செலவில் முழு உடல் பரிசோதனை திட்டத்தை செயல்படுத்துதல் தொடர்பாக நெறிமுறைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 01.03.2023 அன்று 50 வயதினை கடந்த ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழுஉடல் பரிசோதனை செய்வது தொடர்பான இத்திட்டச் சார்ந்த செய்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள். அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்வதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 50 வயதிற்கு மேற்பட்ட அனைத்துவகை ஆசிரியர்களுக்கு மட்டும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிக் கல்வித்துறையில் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு (Package-1 Gold Scherms) திட்டத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ள பின்வரும் பரிசோதனைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் படி, Complete Hoermogram, ESR Urine Analysis, Blood Sugar F & PP , Urea, Creatinine, Uric Acid, Lipid Profiles, Total Cholesterol (HDL&LDL), Triglycerides, Total Cholesterol HDL ratin, Liver Function Test, Serum Bilirubin(Total & direct), AST, ALT,SAP, Total Protein And Albumin, Hba/Ag, Blood Grouping Typing, ECG, X-Ray Chest, USG Abdomen, Pap Smear ஆகிய பரிசோதனைகளை செய்து கொள்ளலாம்.

எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள 50 வயதினை கடத்தவர்களில் வயது மூப்பு அடிப்படையில் தற்போது 150 ஆசிரியர்களை இத்திட்டத்தின் கீழ் பயன் பெற தெரிவு செய்யப்பட வேண்டும். 50 வயதினை கடந்த ஆசிரியர்களிடமிருந்து இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தின் படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சார்ந்த பள்ளியின் தலைமையாசிரிர்கள் உரிய பரிந்துரையுடன் 28.02.2025 க்குள் சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Full physical examination for teachers above 50 years of age at a cost of 1000…! Tamil Nadu government’s super announcement

Vignesh

Next Post

செல்வ வளத்தை வாரி வழங்கும் மீன்குளத்தி பகவதி அம்மன் ஆலயம்..!! வியக்க வைக்கும் வரலாறு..

Mon Feb 17 , 2025
Meenkulathi Bhagavathy Amman Temple, which bestows wealth

You May Like