fbpx

கோவையில் பரபரப்பு…! ஜிடி நாயுடு பெயர் பலகைக்கு கருப்பு மை பூசி அழித்த திமுக நிர்வாகி…!

கோவையை அடுத்த சூலூர் அருகே கலங்கல் என்ற இடத்தில் கடந்த 1893-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி விவசாய குடும்பத்தில் பிறந்தார். இளம் வயதில் படிப்பில் அதிக நாட்டமில்லாதவராக இருந்த அவர் 4-ம் வகுப்பு வரை மட்டுமே பயின்ற அவர் அறிவு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு என தொழில்நுட்ப உலகிற்கு முன்னோடியாக இருந்ததான். அரசு சார்பில் அவரது நினைவாக அவரின் பெயர் சாலைக்கு வைக்கப்பட்டது.

இந்த நிலையில் திமுகவை சேர்ந்த நிர்வாகி ரகுநந்தன் என்பவர் ஜிடி நாயுடு அவர்களின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக அரசு சார்பில் அவரது நினைவாக அவரின் பெயர் வைக்கப்பட்ட சாலையின் பெயர் பலகைக்கு கருப்பு மை பூசி அழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்; தமிழகம் தந்த அறிவியல் மாமேதைகள் ஒருவரான நமது கோவை பகுதியைச் சார்ந்த ஜி.டி.நாயுடு அவர்களின் திறமையான ஆற்றலுக்கு இலக்கு ஏற்படும் விதமாக திமுகவை சேர்ந்த நிர்வாகி ரகுநந்தன் என்பவர் ஜிடி நாயுடு அவர்களின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக அரசு சார்பில் அவரது நினைவாக அவரின் பெயர் வைக்கப்பட்ட சாலைக்கு கருப்பு மை பூசி உள்ளார். அறிவியல் விஞ்ஞானி கோவைக்கு பெருமை சேர்த்த அவருக்கே இந்த நிலைமை என்றால் இந்த விடியா திமுக அரசால் மக்களின் நிலைமை என்ன என பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

Vignesh

Next Post

பொங்கலன்று பல காய்கறிகளை வைத்து இப்படி அவியல் செய்து பாருங்க.!?

Mon Jan 15 , 2024
பொதுவாக பொங்கல் திருநாள் அன்று பல காய்கறிகளை வைத்து குழம்பாக செய்து பால் பொங்கலுக்கு வைத்து கொள்வார்கள். எல்லா வருடமும் இப்படி குழம்பு செய்வதற்கு பதிலாக இந்த வருடம் வித்தியாசமாக பல காய்கறிகளை வைத்து குழம்புடன், அவியலும் செய்து பாருங்கள். அவியல் எப்படி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம் தேவையான பொருட்கள் அவரக்காய், புடலங்காய், கத்திரிக்காய், மஞ்சள் பூசணி, முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, வாழைக்காய், சக்கரை வள்ளி கிழங்கு, மரவள்ளி கிழங்கு, […]

You May Like