தார்வாட் அருகே உள்ள அம்மின பாவி கிராமத்தை சேர்ந்த மயிலரப்பா சிக்கம்பி (40) என்பவரின் மனைவி லட்சுமி உதவியுடன் பக்கத்து வீட்டு பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தலைமறைவான இந்த நபர் மற்றும் அவரது மனைவியையும் தார்வாட் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இவரது மனைவி பக்கத்து வீட்டில் இருக்கும் சிறுமியை தனது வீட்டிற்கு கணவனின் பேச்சை கேட்டு அழைத்து வந்துள்ளார். பின்னர் இவரது கணவர் சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
சிறுமி வீட்டிற்கு வந்ததும் கூல்டிரிங்கில் மயக்க மருந்தை கலந்து பலாத்காரம் செய்துள்ளார். இதனை பற்றி அந்த சிறுமி தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார். அத்துடன் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதையடுத்து மயிலாரப்பா மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தற்போது கணவன்-மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.