fbpx

“நீங்களும் என் காதலி கூட உல்லாசமா இருங்கடா”; இன்ஸ்டாகிராம் காதலனால் சிறுமிக்கு நேர்ந்த சோகம்..

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் 15 வயதான பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு பெற்றோர் இல்லாததால், இவர் தனது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில், அதிக நேரம் இன்ஸ்டாகிராமில் செலவிடும் சிறுமிக்கு, திருவண்ணாமலை அடுத்த நாவக்கரை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் கடந்த அக்டோபர் 20ம் தேதி, பிரியாவை அவரது காதலன் திருவண்ணாமலைக்கு அழைத்துள்ளான். தனது காதலனை நம்பி, பிரியாவும் திருவண்ணாமலை வந்துள்ளார். அங்கு அவரது காதலன் தனது உறவினர் வீட்டில் 3 நாட்கள் தங்க வைத்துள்ளார்.

அங்கு வைத்து அவரது காதலன், பிரியாவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அவர் தனது நண்பர்களை அங்கு வரவளைதுள்ளார். பின்னர் அவர்களும் பிரியாவுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். இதற்கிடையே, வீட்டில் இருந்த சிறுமி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த பிரியாவின் பாட்டி, இதுகுறித்து நாமக்கல் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் 4 நாட்கள் கழித்து, பிரியா அவராகவே வீடு திரும்பியுள்ளார். மேலும், அவருக்கு உடல்நிலை பாதித்துள்ளது. அப்போது தான், பிரியா தனக்கு நேர்ந்த கொடுமைகளை குறித்து கூறியுள்ளார்.

இதைகேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர்கள், இதுகுறித்து நாமக்கல் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து, போலீசார் மாயமான வழக்கை, போக்சோ வழக்காக மாற்றம் செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து, நேற்று அதிகாலை திருவண்ணாமலை மாவட்டம் நாவக்கரைக்கு சென்ற போலீசார் இன்ஸ்டாகிராம் காதலன் உட்பட 8 பேரை பிடித்து நாமக்கல் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வந்துள்ளனர்.

Read more: கவனம்.. ஒரே நாளில் இந்த தொகைக்கு மேல் பணம் பெற்றால்… வீட்டுக்கு வருமான வரி நோட்டீஸ் வரும்..

English Summary

girl-was-sexually-abused-by-her-lovers-friend

Next Post

சுகர் லெவல் கட்டுக்குள் இருப்பது முதல் வெயிட் லாஸ் வரை.. தினமும் இரவில் இதை சாப்பிடுங்க..!! சீக்கிரமே நல்ல ரிசல்ட் கிடைக்கும்

Tue Dec 10 , 2024
Diabetes patients should chew THIS thing before going to bed, helps prevent THESE serious health problems

You May Like