fbpx

தங்கம் விலை இன்றும் உயர்வு… எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44,480க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் அமெரிக்காவில் 2 வங்கிகள் திவாலானதை அடுத்து பாதுகாப்பு கருதி, முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44,480க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசு உயர்ந்து ரூ.75.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.75,700க்கு விற்பனையாகிறது.

Maha

Next Post

கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்……! மனைவியும் கள்ளக்காதலனும் சேர்ந்து செய்த செயல் போலீசில் சிக்கியது எப்படி……!

Fri Mar 24 , 2023
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள ஜம்போதி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் சத்யராஜ் (27) இவர் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், அதே ஊரை சேர்ந்த சசிகலா (24) என்ற பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் மனைவியை ஊரிலேயே விட்டுவிட்டு கணவர் சத்யராஜ் சென்னையில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. […]

You May Like