fbpx

Gold Rate : ஏறலாமா.. இறங்கலாமா..? மாற்றமின்றி தொடரும் தங்கத்தின் விலை..! இன்றைய நிலவரம் இதோ..

இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.

இந்நிலையில், புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம் விலை மாற்றம் இல்லாமல் காணப்பட்டு, பின்னர் குறையத் தொடங்கியது. இதனையடுத்து பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கலான அன்று தங்கம் விலை முதல் முறையாக 62 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தை தொட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை ஒரு சவரன் 63ஆயிரத்தை கடந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

நேற்று கிராம் ஒன்றுக்கு 25 ரூபாய் அதிகரித்து 7930 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 63ஆயிரத்து 430 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Read more : இந்தியர்களை நாடு கடத்த அமெரிக்கா பயன்படுத்திய C-17 விமானம்.. இதன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன..?

English Summary

Gold prices are trading at yesterday’s prices unchanged.

Next Post

காலையில் இனிப்பு சாப்பிடுவதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா..? - மருத்துவர்கள் எச்சரிக்கை

Fri Feb 7 , 2025
Do you know what happens if you eat sweets in the morning?

You May Like