அரசு போக்குவரத்து கழகத்திற்கு, 807 ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில், 800 நடத்துனர் பயிற்சியுடன் கூடிய ஓட்டுனர் பணியிடங்கள், கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில், 203 ஓட்டுனர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை நிரப்புவது தொடர்பாக, போக்குவரத்து துறை, நிதித்துறை கூடுதல் தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார். இப்பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்து, அரசாணை வெளியிட்டுள்ளது.
டிரைவர் பணிக்கு, 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுனர் நடத்துனர் பணிக்கு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு, நேரடியாக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வேலை வாய்ப்பு அலுவலக பதிவும் தேர்வின்போது பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
