ஸ்ரீரங்கத்தைச் சார்ந்த அரசு பள்ளி ஆசிரியர் அந்தப் பள்ளியில் பயிலும் 14 வயது மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது காவல்துறை.
திருச்சிக்கு அருகே உள்ள ஸ்ரீரங்கம் சங்கர் நகரை சார்ந்தவர் சதீஷ்குமார் வயது 40. இவர்களால் குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 14 ஆண்டுகளாக அந்த பள்ளியில் ஆசிரியராக தொடர்ந்து பணியாற்றி வருபவர். மாணவர்களின் சமூக நலனில் அக்கறை உள்ளவர் போல் தன்னை காட்டிக் கொள்ளும் இவர் அடிக்கடி நண்பர்கள் மற்றும் தனக்குத் தெரிந்தவர்களிடம் உதவிகளைப் பெற்று பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வந்திருக்கிறார். இதன் காரணமாக சக ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் மற்றும் பெற்றோர்களிடமும் இவருக்கு நல்ல பெயர் இருந்திருக்கிறது.
இந்நிலையில் அந்தப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வயிற்று வலி இருப்பதாக அவரது பெற்றோரிடம் கூறியிருக்கிறார். இதனை அடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரிடம் தீவிரமாக விசாரித்ததில் அறிவியல் ஆசிரியர் சதீஷ்குமார் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததை பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார் அந்த மாணவி. இதனைத் தொடர்ந்து அவர் மீது லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர் அந்த மாணவியின் பெற்றோர்.
இந்தப் புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த காவல்துறை ஆசிரியர் சதீஷ்குமாரையும் இதில் அவருக்கு உடந்தையாக இருந்த சந்திரசேகர்(55) என்பவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து இருக்கிறது. இவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் ” ஆசிரியர் சதீஷ்குமார் அந்த மாணவியை பள்ளியின் கழிவறைக்கு வரச் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் மேலும் அந்த மாணவியின் வீட்டில் பெற்றோர் இல்லாத போது அவரை சந்திரசேகரின் வீட்டிற்கு அழைத்து வந்து மூன்று மாதங்களாக பாலியல் கொடுமை செய்திருக்கிறார். இதில் மாணவி கர்ப்பமாக இருப்பது தற்போது தெரிந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து சதீஷ்குமார் அவருக்கு உடந்தையாக இருந்த சந்திரசேகரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் மேலும் அவர்களின் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. மேலும் இருவரும் திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர் நல்லவன் போல் நடித்து ஆசிரியர் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.