fbpx

வாவ்.! இது சூப்பர்.! ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாறும் அரசு பள்ளிகள்.! பள்ளி கல்வித்துறையின் மாஸ் திட்டம்.!

அடுத்த கல்வியாண்டில் தமிழகத்தில் செயல்படும் அனைத்து ஆரம்ப பள்ளிகளையும் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்ற திட்டமிட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பான திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் இணைந்து பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வினா வங்கி வெளியிடும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வினா வங்கி புத்தகத்தை வெளியிட்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் பொது தேர்வு தேதிகளில் மாற்றங்கள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார் .

மேலும் வருகின்ற கல்வியாண்டில் தமிழகத்தின் ஆரம்ப புள்ளிகளை ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றுவதற்கான திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதற்காக 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது. இந்தத் திட்டத்தில் 25 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட இருப்பதாகவும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. மேலும் 7,904 கணினி ஆய்வகங்கள் அரசுப் பள்ளிகளில் நிறுவப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

"என்ன ஒரு வில்லத்தனம்.." மனைவிக்கு தினமும் தூக்க மாத்திரை.! வேலைக்கார பெண்ணுடன் கசமுசா.! சிக்கிய கணவன்.!

Tue Jan 9 , 2024
கர்நாடக மாநிலம் பெங்களூரில் மனைவிக்கு தினமும் தூக்க மாத்திரை கொடுத்து வேலைக்காரியுடன் தகாத உறவில் இருந்த கணவன் கையும் களவுமாக பிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூர் சந்திரா லேஅவுட் பகுதியில் வசித்து வரும் சுனில் குமார் என்ற நபருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் தனி வீட்டில் குடியிருந்துள்ளனர். இவர்களுக்கு உதவி செய்வதற்காக […]

You May Like