8-வது ஊதியக்குழு விரைவில் அமைக்கப்பட உள்ள நிலையில், அடிப்படை சம்பளம் அதிரடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி 30 கேபினட் அமைச்சர்களுடன் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசிடம் 8-வது ஊதியக்குழு உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. புதிய அரசு, 8-வது ஊதியக்குழுவை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அது எப்போது என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
அடுத்த ஆண்டுக்குள் மத்திய அரசு ஊழியர்களுக்கு மோடி தலைமையிலான அரசு மிகப்பெரிய ஜாக்பாட்டை அறிவிக்க இருக்கிறது. இந்த ஆணையம் அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரைகளை மத்திய அரசிடம் வழங்கும். இந்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், ஒரு கோடி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். கடந்த காலங்களில் 10 வருடங்களுக்கு ஒருமுறை புதிய ஊதியக்குழு பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்தி வந்தது.
7-வது ஊதியக்குழு 2016 ஜனவரியில் அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில் 8-வது ஊதியக்குழு ஜனவரி 2026 முதல் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு நடந்தால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்க வாய்ப்பிருக்கிறது. 8-வது ஊதியக்குழுவில் பல்வேறு படிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக, ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000ஆக இருக்கும் நிலையில், 8-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டால், அவர்களின் அடிப்படை சம்பளம் ரூ.26,000 ஆக உயரும் என்று கூறப்படுகிறது.
Read More : பேருந்து கவிழ்ந்தும் விடாத பயங்கரவாதிகள்..!! தொடர் துப்பாக்கிச்சூடு..!! நேரில் பார்த்தவர் ஷாக்கிங் தகவல்..!!