திராட்சை பழத்தில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6, வைட்டமின் பி12, வைட்டமின் சி, பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்ற பல்வேறு வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன. திராட்சை பழத்தை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும்.
மேலும் உடல் வளர்ச்சியை நீக்கும், கல்லீரலை பலப்படுத்தும், இதயம், மூளை, நரம்புகள் போன்றவற்றின் ஆற்றலை அதிகப்படுத்துகிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளைக் கொண்ட திராட்சை பழத்தை ஒரு சில நோயுடையவர்கள் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். யார் திராட்சை பழத்தை சாப்பிடக்கூடாது என்பதை குறித்து பார்க்கலாம்?
- குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அதிகமாக சளி பிடித்திருக்கும் நேரத்தில் திராட்சை பழம் சாப்பிட்டால் சளியை அதிகப்படுத்தும்.
- ஆஸ்துமா, இளைப்பு போன்ற நோய்கள் உள்ளவர்கள் திராட்சை பழத்தை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. இது நுரையீரலில் நீர் கோர்த்து நோயை அதிகப்படுத்துகிறது.
- பக்கவாதம், முடவாதம் போன்ற வாத நோய்கள் இருப்பவர்கள் திராட்சை பழத்தை சாப்பிடக்கூடாது.
- கர்ப்பிணி பெண்கள் திராட்சை பழத்தை அதிக அளவு எடுத்துக் கொள்ளக் கூடாது.
- திராட்சை பழத்தை அதிகளவு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றது.
- உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் திராட்சை பழத்தை சாப்பிடக்கூடாது. திராட்சை பழத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பதால் இது உடல் எடையை அதிகப்படுத்தும்.
- சிறுநீரக கோளாறு பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிடக்கூடாது. போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் திராட்சை பழத்தை விடக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.