fbpx

பெரும் சோகம்..!! திமுக முன்னாள் MLA கோதண்டம் காலமானார்..!! அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் இரங்கல்..!!

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஈ.கோதண்டம் (99) உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ-வான ஈ.கோதண்டம் (99) கடந்த சில மாதங்களாகவே வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலன்ன்றி இன்று (நவம்பர் 12) காலமானார்.

இவர், 1989-91 மற்றும் 1996-2001 என இரண்டு முறை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்துள்ளார். 1991ஆம் ஆண்டு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கோதண்டம் மறைவுக்கு திமுக நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது இறுதிச் சடங்கு நாளை (நவம்பர் 13) குன்றத்தூரில் நடைபெறவுள்ளது. இவருக்கு 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். கோதண்டத்தின் மகன் கோ.சத்தியமூர்த்தி குன்றத்தூர் நகராட்சி தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : ’சென்னையின் முழு உருவாக்கமே அவர்கள் தான்’..!! ’எப்படி பிரித்து பார்க்க முடியும்’..? ’இது ஒரு பாடமாக இருக்கட்டும்’..!! கஸ்தூரி வழக்கில் ட்விஸ்ட்..!!

English Summary

Former Member of Legislative Assembly of Sriperumbudur Constituency E. Kothandam (99) passed away today due to ill health.

Chella

Next Post

தமிழக காவல்துறையின் செயல்பாடு நாளுக்கு நாள் சீரழிந்து வருகிறது..! அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

Tue Nov 12 , 2024
The performance of Tamil Nadu Police is deteriorating day by day.

You May Like