fbpx

தூள்…! 100 நபர்களுக்கு பசுமை சாம்பியன் விருது + ரூ.1 லட்சம் பரிசுத்தொகை…! தமிழக அரசு அறிவிப்பு…!

தமிழ்நாடு அரசின், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்று சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு அதாவது தனிநபர்கள்/அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது 100 நபர்களுக்கு வழங்கி, தலா ரூ.1,00,000/- வீதம் பண முடிப்பும் வழங்க உள்ளது. கீழ்கண்ட தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக நாமக்கல் மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள்/கல்வி நிறுவனங்கள்/குடியிருப்போர் நல சங்கங்கள்/தனிநபர்கள்/ உள்ளாட்சி அமைப்புகள்/ தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.

சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள் /பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை ஆகும்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனி நபர்கள் / நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதற்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் நாள் கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Green Champion Award for 100 people + Rs. 1 lakh prize money…! Tamil Nadu Government Announcement

Vignesh

Next Post

தர்பூசணி விதையை, மறந்தும் கூட தூக்கி போடாதீங்க; பழத்தை விட இதில் தான் சத்து அதிகமாம்..

Mon Mar 10 , 2025
health benefits of watermelon seeds

You May Like