fbpx

நிச்சயதார்த்தத்தைக் கொண்டாட கடற்கரைக்கு சென்ற புது மாப்பிள்ளை.! அவருக்கு முன் அங்கு காத்திருந்த எமன்.!

திருமண கனவுகளுடன், நடந்து முடிந்த நிச்சயதார்த்த விழாவை கொண்டாட கடற்கரைக்குச் சென்ற, கும்பகோணத்தைச் சேர்ந்த மாப்பிள்ளை மற்றும் அவரது உறவினர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு நாள் மட்டுமே கழிந்த நிலையில், மாப்பிள்ளை சடலமாக மீட்கப்பட்டது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தைச் சேர்ந்த மூர்த்தி அவர்களின் மகன் நவீன் குமார் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த நிவேதா என்பவருக்கும் நேற்று முன்தினம், திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இந்த மகிழ்ச்சியை கொண்டாட இரு குடும்பத்தினரும், மயிலாடுதுறையில் உள்ள தரங்கம்பாடிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். சுமார் 25 பேர் சென்ற அந்த சுற்றுலாவில், காலை வேளையில் அனைவரும் அங்கிருந்த கடலில் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ராட்சச அலையில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் சரவணன், மாப்பிள்ளை நவீன் குமார் மற்றும் மணப்பெண் நிவேதா ஆகியோர் அடித்து செல்லப்பட்டனர். அங்கிருந்த அனைவரும் அவர்களை காப்பாற்ற முயன்ற போதும், நிவேதாவை மட்டுமே மயக்க நிலையில் மீட்க முடிந்தது. மற்ற இருவரின் உடல்களும் சடலமாக மீட்கப்பட்டன.

தகவலறிந்து அங்கே விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள், இறந்த இருவரின் உடல்களையும் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் நிவேதா உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நிச்சயதார்த்த விழா முடிந்து ஒரு நாள் மட்டுமே கழிந்த வேளையில், அதனைக் கொண்டாட சென்ற இடத்தில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்தது, சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்களையும், அங்கிருந்தவர்களையும் அதிர்ச்சியிலும், துயரிலும் ஆழ்த்தியது.

Next Post

கவுதமாலாவில் பயங்கர நிலநடுக்கம்..!! பூகம்பத்திற்கு ஆளாகும் 90% பகுதிகள்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Sat Jan 27 , 2024
மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமெரிக்காவில் உள்ள நாடான கவுதமாலாவில் வெள்ளிக்கிழமை இரவு 11:52 மணிக்கு, டாக்சிஸ்கோ நகரத்தில் இருந்து 7 கிலோமீட்டர் (நான்கு மைல்) தொலைவில் 108 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது. யுனெஸ்கோவின் உலகப் […]

You May Like