டெலிகிராம் செயலியின் மூலமாக ஒரு நபரிடம் மோசடி கும்பலொன்று 25 லட்சம் ரூபாய் வரையில் மோசடி செய்திருக்கிறது. ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்த சுபத்ரா கோஷ் என்ற நபர் தான் அந்த கும்பலிடம் பணத்தை இழந்து உள்ளார். இவருக்கு சில நாட்களுக்கு முன்னர் டெலி கிராம் செயலியின் மூலமாக இணையதளத்தின் மூலமாக வேலை வாங்கி தருகிறோம் என்று குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதை பார்த்த அந்த நபர் அதனை நம்பி அழைப்பை ஏற்றுள்ளார். முதலில் நீங்கள் 10,000 ரூபாய் செலுத்துங்கள் நாங்கள் சிறு, சிறு வேலைகளை கொடுக்கிறோம் அதை செய்தால் 18000 திரும்பக் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
ஆகவே இவரும் முதலில் 10,000 ரூபாய் அனுப்பி இருக்கிறார். அதனைத் தொடர்ந்து, இவருக்கு 30 லிங்குகளை அனுப்பி 5 ஸ்டார் ரேட்டிங் இதற்கு கொடுங்கள் என்று தெரிவித்துள்ளனர். அந்த மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் இவரும் அதனை செய்ததால் 18000 ரூபாய் வாங்கி கணக்கு வந்துள்ளது.
இதை நம்பிக்கையில் சுபத்ரா கோஷ் மீண்டும் அதிக லாபம் கிடைக்க வேண்டும் என்ற ஆசையில் தொடர்ந்து, தன்னுடைய பணத்தை மோசடிகளும் அல்ல முதலீடு செய்திருக்கிறார் இப்படி ஒரு கட்டத்தில் சுபத்ரா கோஷ் 25,29,176 ரூபாய் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் அந்த பணத்தை முடக்கி வைத்து எடுக்க விடாமல் தடுத்து விட்டனர்.
அதோடு 12 லட்சம் ரூபாய் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் இல்லையென்றால் வங்கி கணக்கை ஹேக் செய்து விடுவோம் என்று மிரட்டி இருக்கின்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் காவல் துறையினரின் நாடி புகார் வழங்கியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்திருக்கிறார்கள்