fbpx

ஆண்களே..!! இந்த பழத்தை சாப்பிட்டால் அந்த விஷயத்தில் உங்களை அடிச்சிக்கவே முடியாது..!!

ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், உடலில் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும் பெறுவது முக்கியம். பொதுவாக ஆண்கள், நாள் முழுவதும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடினமாக உழைக்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில் நாள் முழுவதும் சத்தான உணவை சாப்பிடாமல் இருந்தால் உடல் மிகவும் பலவீனமடையும். அந்த வகையில், ஆண்கள் பேரீச்சம்பழம் சாப்பிடுவதால், ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

பேரீச்சம்பழத்தில் பல ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. அவை ஆரோக்கியமான உடலுக்கு மிகவும் முக்கியமானதாகும். இதில் மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, செலினியம், தாமிரம், வைட்டமின் ஏ, பி6, கே, கால்சியம், இரும்புச்சத்து உள்ளிட்ட பண்புகள் உள்ளன. காலையில் அலுவலகம் செல்லும் முன் பேரீச்சம்பழத்தை காலை உணவாக சாப்பிட்டு வந்தால், நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பீர்கள்.

இதை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து காலை அல்லது இரவு தூங்கும் முன் சாப்பிடலாம். பேரீச்சம்பழத்தை தண்ணீரில் ஊறவைத்தும் ஓட்ஸ், ஸ்மூத்திஸ், ஷேக்ஸ், ஸ்வீட் உணவுகளிலும் கலந்து சாப்பிடலாம். பேரீச்சம்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உங்கள் சிந்தனைத் திறன் மேம்படும். நீங்கள் வயதாகும்போது அல்சைமர் நோய் வருவதற்கான அபாயம் பெருமளவு குறையும்.

பேரீச்சம்பழத்தில் உள்ள இரும்புச்சத்து உடலில் ரத்தசோகை வராமல் தடுக்கிறது. இதில் உள்ள புரோட்டீன்கள் உடலுக்கு வலிமையைக் கொடுக்கும். பொட்டாசியம், நரம்புகளுக்கு புத்துயிர் அளிக்கும். எனவே, உடல் வலிமையை அதிகரிக்க ஆண்கள் கண்டிப்பாக பேரீச்சம்பழத்தை தினமும் சாப்பிட வேண்டும்.

Read More : டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.கே.பிரபாகரன் ஐஏஎஸ் நியமனம்..!! ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு..!!

English Summary

Eating dates for men has many benefits.

Chella

Next Post

குலதெய்வம் தோன்றியது எப்படி..? மக்களே இந்த வழிபாட்டை மறந்துறாதீங்க..!!

Wed Aug 14 , 2024
This clan deity worship is able to get the benefits of other deity worships as well

You May Like