கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பிறகு, இந்தியாவில் இருமல், சளி மற்றும் காய்ச்சல் ஆகியவை பொதுவானதாகிவிட்டன.. கோவிட் தொற்றுநோய் இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய பிறகு, இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலின் H3N2 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.. எனவே காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால், சுய சிகிச்சைக்கு பதிலாக மருத்துவ உதவியை நாடுவது முக்கியம், சரியான நேரத்தில் சரியான சிகிச்சை எடுக்கப்படாவிட்டால் நிலைமை மோசமாகலாம்..
இந்நிலையில் H3N2 வைரஸ், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே நீரிழிவு நோயாளிகள், கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. நீரிழிவு நோய் இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும், இது சுவாச அமைப்பின் திறனை பாதிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, நீரிழிவு நோய் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா காரணமாக மரணம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
H3N2 வைரஸ், இருமல், சளி, வயிற்றுப்போக்கு, தொண்டை வலி, அடைப்பு மூக்கு, காய்ச்சல், தொடர் இருமல், உடல்வலி, சளி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. கடுமையான பாதிப்பு ஏற்பட்டால் நிமோனியா மற்றும் பிற ஆபத்தான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
“நீரிழிவு நோய்க்கும் காய்ச்சலுக்கும் இடையே வலுவான தொடர்பு உள்ளது, ஏனெனில் நீரிழிவு நோயாளிகள் வைரஸால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் மற்றும் கடுமையான சிக்கல்களை அனுபவிக்கும் அபாயம் அதிகம்” என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்..
நீரிழிவு நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும் ஒரு நிலை.. இதை சரியாக கவனிக்கவில்லை எனில் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். அத்தகைய ஒரு சிக்கலானது காய்ச்சலால் பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்து ஆகும். H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் என்பது நீரிழிவு நோயாளிகளுக்கு குறிப்பாக ஆபத்தானது என்றும் தெரிவித்துள்ளனர்..
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வைரஸ் தொற்றைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்..?
தடுப்பூசி : காய்ச்சலை தடுப்பதற்கான சிறந்த வழி தடுப்பூசி போடுவதுதான். காய்ச்சல் தடுப்பூசி 6 மாதங்களுக்கும் மேலான அனைவருக்கும் பரிந்துரைக்கப்படுகிறது, மேலும் இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் முக்கியமானது. H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் மற்றும் காய்ச்சலின் பிற மாறுபாடுகளில் இருந்து தடுப்பூசி பாதுகாக்க உதவும்.
கை சுகாதாரம் : சோப்பு மற்றும் தண்ணீருடன் உங்கள் கைகளை தவறாமல் கழுவுவதன் மூலம் கிருமிகள் பரவாமல் தடுக்கலாம். சாப்பிடுவதற்கு முன் அல்லது உங்கள் முகத்தை தொடுவதற்கு முன் உங்கள் கைகளை கழுவுவது மிகவும் முக்கியம்.
நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும் : நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். அத்தகைய நபரை நீங்கள் தொடர்பு கொண்டால், உங்கள் கைகளை நன்கு கழுவ வேண்டும்.
வீட்டிலேயே இருங்கள் : உங்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், மற்றவர்களுக்கு வைரஸ் பரவாமல் இருக்க வீட்டிலேயே இருங்கள். ஓய்வெடுக்கவும், நிறைய திரவங்களை குடிக்கவும்.
சர்க்கரை அளவை நிர்வகிக்கவும் : உயர் இரத்த சர்க்கரை அளவுகள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தலாம். இது தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதை கடினமாக்குகிறது. வழக்கமான கண்காணிப்பு, பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக்கொள்வது, ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மற்றும் வழக்கமான உடற்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துலாம்.. காய்ச்சல் உங்கள் இரத்த சர்க்கரை அளவு ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தும், எனவே உங்கள் அளவை அடிக்கடி கண்காணிக்க வேண்டியது அவசியம். உங்கள் இன்சுலின் அளவை அல்லது மற்ற மருந்துகளை தேவைக்கேற்ப சரிசெய்ய தயாராக இருங்கள்.
சுவாச சுகாதாரம் : இருமல் அல்லது தும்மல் ஏற்படும்போது உங்கள் மூக்கு மற்றும் வாயை மூடிக்கொள்ளவும். மேலும் இருமினாலோ அல்லது தும்மினாலோ ஒரு டிஷ்யூ பேப்பரை பயன்படுத்தவும், பயன்படுத்திய பேப்பர்களை சரியாக அப்புறப்படுத்துவதை உறுதி செய்யவும்.
நீரேற்றத்துடன் இருங்கள்: நீரேற்றமாக இருக்க தண்ணீர் மற்றும் சர்க்கரை இல்லாத பானங்கள் போன்ற ஏராளமான திரவங்களை குடிக்கவும். உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடிய சர்க்கரை பானங்களை தவிர்க்கவும். நீரிழிவு நோயாளிகள் இந்த வழிகளை பின்பற்றி காய்ச்சலில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும் தீவிர சிக்கல்களைத் தவிர்க்கவும்.