டிஎன்பிஎஸ்சி உதவி செயலர் பிரிவில் 59 காலியிடங்கள் இருப்பதாக கடந்த ஏப்ரல் மாதம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து, இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த மே மாதத்துடன் அதற்கான காலகடு முடிவடைந்த நிலையில், வருகின்ற ஜூலை மாதம் 1ம் தேதி இதற்கான தேர்வு நடைபெற இருக்கிறது.
தற்சமயம் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டிருப்பதாகவும் தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று அந்த ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையம் தெரிவித்திருக்கிறது.
ஆகவே தேர்தவர்கள் முதலில் tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும் பின்னர் அதில் அசிஸ்டன்ட் செயலர் ஹால் டிக்கெட் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களுடைய பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு ஹால் டிக்கெட் பதிவு செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம்.