fbpx

Harsh Vardhan | ’தேர்தலில் வாய்ப்பு வழங்கவில்லை’..!! அரசியலில் இருந்து விலகுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிவிப்பு..!!

டெல்லி யூனியன் பிரதேச பாஜகவின் மூத்த தலைவரான ஹர்ஷ் வர்தன் 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் டெல்லி சாந்தினிசவுக் தொகுதியில் வெற்றி பெற்றார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலிலும் அதே தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றார். மத்திய சுகாதாரத் துறை மற்றும் அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகித்தார். கடந்த 2021இல் அவர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் ஹர்ஷ் வர்தனின் சாந்தினி சவுக் தொகுதி வேட்பாளராக பிரவீன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அரசியலில் இருந்து விலகுவதாக ஹர்ஷ் வர்தன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ”கடந்த 30 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். 5 முறை எம்எல்ஏஆகவும் 2 முறை எம்பியாகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளேன்.

கட்சி மற்றும் அரசுப் பணிகளில் முக்கிய பதவிகளை வகித்துள்ளேன். தற்போது மீண்டும் எனது இருப்பிடத்திற்கு செல்கிறேன். ஏழைகளுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதற்காக எம்பிபிஎஸ் படித்தேன். ஆர்எஸ்எஸ் தலைமையின் வழிகாட்டுதலால் தேர்தலில் போட்டியிட்டு மக்களுக்கு சேவையாற்றினேன். வறுமை, நோய், அறியாமைக்கு எதிராகப் போராடினேன். டெல்லி சுகாதாரத் துறை அமைச்சராகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகவும் திறம்பட பணியாற்றினேன். எனது காது, மூக்கு, தொண்டை மருத்துவமனை டெல்லி கிருஷ்ணா நகரில் இருக்கிறது. அந்த மருத்துவமனைக்கு திரும்பி செல்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : தாமரை சின்னத்திற்கு எதிராக வழக்கு..!! சீமானுக்கு பதிலடி கொடுத்த Annamalai..!!

Chella

Next Post

Rich People | கோடிகளில் குவியும் சொத்து..!! இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பணக்காரர்களின் எண்ணிக்கை..!!

Mon Mar 4 , 2024
இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நைட் ஃபிராங்க் (Knight Frank) அறிக்கையின்படி, இந்திய நாட்டில் ரூ.250 கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்த வகையில், 2022ஆம் ஆண்டில் 12,495 பணக்காரர்களின் எண்ணிக்கை 6.1 சதவீதம் அதிகரித்து 2023ஆம் ஆண்டில் 13,263 ஆக இருந்தது. 2028ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரித்து 19,908 ஆக […]

You May Like