அகவிலைப்படி உயர்த்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் போலியானது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) தற்போது 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப்பில் கடிதம் ஒன்று பரவி வருகிறது. மேலும் அந்த கடிதத்தில் “மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியானது 2022 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அடிப்படை ஊதியத்தின் 34% இல் இருந்து 38% ஆக உயர்த்தப்படும் என்று குடியரசுத் தலைவர் முடிவு செய்வதில் மகிழ்ச்சியடைகிறார்” என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்த கடிதம் போலியானது என்றும், அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. 01.07.2022 முதல் அகவிலைப்படியின் கூடுதல் தவணை அமலுக்கு வரும் என்று வாட்ஸ்அப்-ல் ஒரு போலி செய்தி பரவுகிறது. மத்திய செலவினத் துறை இது போன்ற எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்திய பத்திரிகை தகவல் பணியகமான பிஐபியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது..
அகவிலைப்படி என்றால் என்ன? அகவிலைப்படி என்பது வாழ்க்கைச் செலவுகளுக்கான கொடுப்பனவாகும்.. அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் அரசாங்கம் அகவிலைப்படியை செலுத்துகிறது. சம்பளத்தின் அகவிலைப்படி என்பது, இந்தியா மற்றும் பங்களாதேஷில் உள்ள இரு ஊழியர்களுக்கும் பொருந்தும்.