fbpx

நீங்கள் டிகிரி முடித்து இருக்கிறீர்களா….! இதோ அஞ்சல் துறையில் உங்களுக்காக காத்திருக்கும் அருமையான வேலை வாய்ப்பு….!

இந்திய அஞ்சல் துறை சார்பாக வெளியிடப்பட்டிருக்கும் வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து, தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

அதன்படி, அஞ்சல் துறை சார்பாக வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பில், technical supervisor பணிக்கு ஒரு காலி பணியிடம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களின் வயது 22 முதல் 30 வயது வரையில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல, இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுமென்றால், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், degree மற்றும் diploma போன்றவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கே பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு, மாதம் ஒன்றுக்கு, level 6 in the pay Matrix as per 7th CPC grade pay 4200 என்ற அளவில் ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் நபர்கள் வர்த்தக சோதனையின் அடிப்படையில், தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள்,  https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_260723_MMS_DL_ENG.pdf என்ற லிங்கை கிளிக் செய்து,  விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வமான முகவரிக்கு வரும் 16.9.2023 அன்று மாலைக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

Next Post

”இனி பத்திரப்பதிவின்போது சொத்துகள் தொடர்பான புகைப்படங்களும் கட்டாயம்”..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

Fri Sep 15 , 2023
பதிவுத்துறையில் போலியான ஆவணங்கள் பதியப்படுவதை தடுக்கவும், விடுதல் இன்றி அரசுக்கு வருமானம் வருவதை உறுதி செய்யவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கட்டடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் என்று ஆவணங்கள் பதியப்படுவதால், அரசுக்கு வரும் வருவாய் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. எனவே, காலி மனையிடங்களை ஜியோ கோ.ஆர்டினேட்ஸோடு (புவியியல் ஆயங்கள்) புகைப்படம் எடுத்து அதனை ஆவணமாக இணைக்க வேண்டுமென கடந்த வாரத்தில் அறிவுரை வழங்கப்பட்டது. பதியப்படும் ஆவணத்தில் குறிப்பிடப்படும் சொத்தின் […]

You May Like