தற்போது உள்ள காலகட்டத்தில், செல்போன் பலருக்கு தங்களின் குழந்தை போல் ஆகிவிட்டது. ஆம், தூங்கும் போது செல்போன் அருகில் இல்லை என்றால் அவர்களுக்கு தூக்கமே வராது. தலையணைக்கு அருகில் செல்போன் வைத்தால் தான் தூக்கமே வரும் என்று கூறும் அளவிற்கு செல்போனின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. ஆனால் இது முற்றிலும் தவறான பழக்கம். இதனால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும்.
ஆம், செல்போனிலிருந்து நீல ஒளி வெளியேறுவதால், அது தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் மெலடோனின் ஹார்மோனின் உற்பத்தியை தடுத்து, தூக்கத்தை சீர்குலைத்து விடுகிறது. சரியான தூக்கம் இல்லை என்றாலே உடலில் பாதி நோய்கள் வந்துவிடும். மேலும், இதனால் உடலும் மனமும் சோர்ந்து போகும்..
செல்போன்கள் தொடர்ந்து நோட்டிபிகேஷன்களை வெளியிடுவதால், நம்மில் அநேகர் நோட்டிபிகேஷன் வந்த உடனே செல்போனை எடுத்து பார்ப்பது உண்டு. இதனால் அதில் வரும் செய்திகள் ஒருவிதமான பதற்றத்தையும் மன அழுத்தத்தையும் நம்மில் ஏற்படுத்துகிறது. இதனால் தூக்கம் பாதிக்கப்பட்டு கவலை மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கும்..
ஒரு சில ஆய்வுகளின் படி, செல்போனில் இருந்து வெளியேற்றப்படும் கதிர்வீச்சு, நீண்டகால தலைவலி அல்லது புற்றுநோய் போன்ற தீவிர நோய்களுக்கு வழிவகுக்கும் அபாயம் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
போனை தலையணைக்கு அருகில் வைக்கும் போது, செல்போன் அதிக வெப்பமடைந்து வெடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும், இரவில் நம் உடனே செல்போனை வைத்துக்கொண்டு அதிக நேரம் செல்போன் பார்ப்பதால் தொழில்நுட்பத்தின் மீது ஒரு அடிமைத்தனம் உருவாகி, நாம் வழக்கமாக செய்யும் பணிகளில் கவனசிதறல்கள் ஏற்படும்…
தலையணை அருகில் செல்போனை வைத்து தூங்குவதால், அது கணவன் மனைவிக்கிடையே கவனத்தை திசை திருப்ப வாய்ப்பு உண்டு. இதனால் தனிப்பட்ட உறவுகளை பாதிக்கும் புறக்கணிப்பு அல்லது துண்டிப்பு உணர்வுகளை ஏற்படுத்தி விடும். இதனால் செல்போனை படுக்கையை விட்டு அதிக தொலைவில் வைப்பது தான் உங்கள் உடலுக்கும் குடும்பத்திற்கும் நல்லது.
Read more: உங்க குழந்தையின் உயரம் அதிகரிக்க வேண்டுமா? இதை கொடுத்து பாருங்க, ஒரே மாதத்தில் வித்யாசம் தெரியும்..