கலாச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாராய வியாபாரி கண்ணுகுட்டி இதுவரை கள்ளச்சாராயத்தை அருந்தியது கிடையாது என என போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். இதில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, 19-ம் தேதி இரவு 11 மணி நிலவரப்படி 17 பேர் உயிரிழந்தனர். நேற்று மாலை நிலவரப்படி, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது. இதில் 3 பேர் பெண்கள். உயிரிழந்தவர்களில் 31 பேரின் உடல்கள், நேற்று ஒப்படைக்கப்பட்டன.
இதற்கிடையே, அதே பகுதியில் மேலும் பலரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவர்களும் அடுத்தடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அந்த வகையில், கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மரில் 168 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 21 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரத்தில் முக்கிய நபர் உட்பட இதுவரை 11 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
இந்த கலாச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாராய வியாபாரி கண்ணுகுட்டி இதுவரை கள்ளச்சாராயத்தை அருந்தியது கிடையாது என என போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் 25 ஆண்டுகளாக சாராயம் விற்று வரும் அவர் மீது ஏற்கனவே 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.