fbpx

இந்த விஷயம் தெரியுமா.?இரத்தத்தில் கொலஸ்ட்ராலை குறைக்கும் நல்லெண்ணை.!

தென்னிந்தியாவில் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் எண்ணெய் நல்லெண்ணெய் ஆகும். இது எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆகும். கடுகு எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை விட இந்த எண்ணெய் தான் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்களை கொண்டிருப்பதோடு சிறந்த மருத்துவ பயன் உள்ளதாகவும் இருக்கிறது. நல்லெண்ணெய் சமையலுக்கு பயன்படுத்துவதால் கொழுப்பு கட்டிகள் உடலில் ஏற்படாமல் தடுக்கிறது. இந்த நல்லெண்ணெயில் ஜிங்க் சத்து அதிக அளவில் இருக்கிறது. இது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நல்லெண்ணெய் குளிர்ச்சி தன்மை கொண்டது. இது சமையலுக்கு பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உடலில் தேய்த்து குளித்து வரும்போது உடல் உஷ்ணம் குறையும். மேலும் உடல் உஷ்ணத்தால் ஏற்படும் சிறுநீர் கடுப்பு மற்றும் வயிற்று வலி ஆகியவற்றுக்கு இந்த நல்லெண்ணெய் சிறந்த தீர்வாக இருக்கிறது. இந்த நல்லெண்ணெயை கால் பெருவிரல் மற்றும் அடிவயிற்றில் தடவும் போது உடலில் ஏற்படும் உஷ்ண கடுப்புகள் நீங்குகிறது.

மற்ற எண்ணெய்களை விட நல்லெண்ணெய் கெட்ட கொழுப்புகள் குறைவாகக் கொண்டது. இதனால் நல்லெண்ணையை பயன்படுத்தி சமைக்கும் போது கொலஸ்ட்ராலில் இருந்து உடலை காத்துக் கொள்ளலாம். உடல் வலி மற்றும் மூட்டு வலிக்கு இந்த எண்ணையை தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும். மேலும் பிரசவித்த பெண்களுக்கு வயிற்றில் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க் நீங்குவதற்கும் இந்த எண்ணெய் உதவுகிறது. ஸ்ட்ரெச் மார்க் உள்ள இடத்தில் நல்லெண்ணையை தொடர்ந்து தடவி வர அந்தத் தடங்கள் காணாமல் போகும்.

Next Post

தமிழகத்தில் இன்று தரமான இருக்க போது...! 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...! வானிலை மையம் எச்சரிக்கை...!

Mon Nov 27 , 2023
22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 27-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் இரவு 10 […]
’நெருங்கும் புயல்’..!! என்ன செய்ய வேண்டும்..? என்ன செய்யக்கூடாது..? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

You May Like