பொதுவாகவே நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைத்து பல பொருள்களை தேவை இல்லாமல் வங்கி விடுகிறோம். உதாரணமாக, தேனில் ஊற வைத்த நெல்லிக்காய், தாமரை விதைகள்.. இது போன்ற பொருள்களை சாப்பிடுவதால் கட்டாயம் ஆரோக்கியம் கிடைக்கும். ஆனால், அதிக காசு கொடுத்து வாங்கும் இந்த பொருள்களை விட, வீட்டில் சுலபமாக கிடைக்கும் ஒரு சில பொருள்களில் அதிக சத்துக்கள் கிடைக்கும்.
அந்த வகையில், விலை கம்மியாக இருந்தாலும் ஏராளமான சத்துக்களை கொண்டது தான் பொட்டுக்கடலை. ஆம், பொட்டுக்கடலையில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் A, B1, B2, B3, கால்சியம் போன்ற பல சத்துக்கள் அதிகமாக உள்ளது. சத்துக்கள் அதிகம் இருந்தாலும் கூட, இதில் கலோரிகள் மிகவும் குறைவு தான். இதனால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பொட்டுக்கடலையை வறுத்து சாப்பிடலாம்.
பொட்டுக்கடலை சாப்பிடுவதால் உடலில் உள்ள குளுக்கோஸ் அளவு சமநிலையாக இருக்கும். இதனால், நீரிழிவு நோயாளிகள் பொட்டுக்கடலை சாப்பிடுவது மிகவும் நல்லது.. மேலும், பொட்டுக்கடலை சாப்பிடுவதால், உடல் சீராக இயங்குவது மட்டும் இல்லாமல், நரம்புகள் ஆரோக்கியமாக செயல்படும். இதனால், நரம்பு சம்பந்தமான எந்த பாதிப்புகள் இருந்தாலும் சரி, பொட்டுக்கடலையை வறுத்து சாப்பிடுவது நல்லது.
பொட்டுக்கடலையில், ஏராளமான செலினியம் உள்ளது. இதனால், தினமும் ஒரு கைப்பிடி பொட்டுக்கடலை சாப்பிடுவதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மட்டும் இல்லமல், புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறையும். மேலும், முடி வளர்ச்சி, சருமம், நகங்கள் பாதுகாப்புக்கு தேவையான புரோட்டீன் அனைத்தையும் வறுத்த பொட்டுக்கடலை கொடுக்கிறது.
குறிப்பாக, பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில், அதிக ரத்தப்போக்கு இருந்தால், ஒரு கைப்பிடி பொட்டுக்கடலை சாப்பிட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் போதும், ரத்தப்போக்கு கட்டுக்குள் இருக்கும். மேலும், இது இதய நோய் ஏற்படுவதை தடுக்கிறது. ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது, சரும பாதுகாப்புக்கு உதவுகிறது..
Read more: அடிக்கடி ஆபாசப் படம் பார்த்து, சுய இன்பம் செய்த மனைவி; விரக்தியில் கணவன் செய்த காரியம்..