நபிகள் நாயகத்தின் கூற்றுப்படி, கருஞ்சீரகம் இறப்பை தவிர அனைத்து நோய்களையும் குணமாக வல்லது. பைபிளிலும் கருஞ்சீரகம் பற்றிய குறிப்பு இருக்கிறது. அரபு நாடுகளில் இதனை சமையலில் சேர்த்து பயன்படுத்துகின்றனர்.
கருஞ்சீரகத்தின் விதையில் உள்ள `தைமோகுயினன்’ என்ற நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய வேதிப்பொருள் வேறு எந்த பொருளிலும் இல்லை. மேலும் இது உடலில் சேரும் கெட்ட கொழுப்பை நீக்கி உடல் எடையை குறிக்க உதவுகிறது. அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து போன்ற பல சத்துக்கள் இதில் உள்ளது. கருஞ்சசீரகம் எலும்பு மஜ்ஜை உற்பத்தியைச் சீராக்கி புற்றுநோய்க் கட்டிகள் உருவாகாமல் தடுக்கும். மேலும் ஆஸ்துமா, சுவாசப்பிரச்னைகள், இதயநோய் போன்றவை உடலை தாக்காமல் இருக்க உதவும்.
காலை எழுந்ததும் வெறும் வயிறில் கருஞ்சீரகப்பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் உடலில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். மேலும் உடலில் சேர்ந்துள்ள நச்சுக்கள் மலம், சிறுநீர் வியர்வை மூலம் வெளியேறும். ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு ரத்த ஓட்டம் சீராகும். பெண்கள் மாதவிடாய் நாளுக்கு 10 நாட்களுக்கு முன்பு இருந்தே கருஞ்சீரகப் பொடியை நீரில் கலந்து குடித்து வந்தால் மாதவிடாய் சிக்கல்கள் சரியாகும். தோல் நோய் உள்ளவர்கள், சொரியாஸில், சிரங்கு போன்ற பிரச்னை உள்ளவர்கள் கருஞ்சீரகப்பொடியை அரைத்து உடலில் தேய்த்து குளித்து வந்தால் விரைவில் குணமடைவதுடன் புண்கள் மற்றும் தழும்புகளும் மறையும்.