மாமிசம், முட்டை, காய்கறிகளை விட புரதச் சத்து அதிகம் நிறைந்த ஒரு பொருள் என்றால், அது வேர்க்கடலை தான். ஆம், நிலக்கடலையில் வைட்டமின் ஈ, மெக்னீசியம், ஃபோலேட், காப்பர் மற்றும் அர்ஜினைன் போன்ற பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. நிலக்கடலையில் உள்ள புரதச் சத்து, உடல் எடையைக் குறைப்பது மட்டும் இல்லாமல், தசை வலிமையைப் பெற உதவும்.
நிலக்கடலை பற்றிய ஆராய்ச்சியில் பல்வேறு தகவல்களை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். ஆம், அதன் படி தினமும் 10 கிராம் அளவு வேர்க்கடலையை சாப்பிட்டால், நீண்ட காலம் நோய்களின்றி வாழ்வதாகவும், இதய நோய், புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் போன்ற நோய்களில் இருந்து நமது உடலை பாதுகாக்க முடியும்.
இதனால் தான், சீனர்கள் தங்களது உணவில் தினமும் கடலையை சேர்த்துக் கொள்கிறார்கள். நாம் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த தினசரி உணவுகளை மாற்றி தான் ஆக வேண்டும். அந்த வகையில், இதன் முதல் படியாக, நாம் தினமும் அரைக்கும் சட்னியில் இருந்து மாற்றத்தை துவங்குவது சுலபமான ஒன்று. ஆம், அதிக சத்துக்கள் நிறைந்த இந்த நிலக்கடலையில் சட்னி செய்து சாப்பிடுவதால், பல நன்மைகள் கிடைக்கும்.
இந்நிலையில், சுவையான நிலக்கடலை சட்னி எப்படி தயாரிக்கலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துக் கொள்ளுங்கள். இந்த சட்னி தயாரிக்க, முதலில் ஒரு கப் நிலக்கடலையை, 8 நிமிடங்களுக்கு நன்கு வறுக்க வேண்டும். பின்னர், வறுத்த நிலக்கடலையை ஆற வைத்து, அதன் தோலை நீக்கி விடுங்கள். இதையடுத்து, ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய், பொடியாக நறுக்கிய வெங்காயம் 100 கிராம், 6 பல் பூண்டு மற்றும் மூன்று காய்ந்த மிளகாய்கள் சேர்த்து 5 நிமிடங்களுக்கு வதக்க வேண்டும்.
பின்னர், இவை அனைத்தும் நன்கு ஆறிய பிறகு, வறுத்து வைத்திருந்த நிலக்கடலையுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். இதனை அரைக்கும் போது கூடுதலாக அரை கப் துருவிய தேங்காய், சிறிதளவு புளி, ஒரு டீஸ்பூன் உப்பு மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். பின்னர் வழக்கம் போல், அரைத்து வைத்திருக்கும் சட்னியின் மீது கறிவேப்பிலை மற்றும் கடுகு ஆகியவற்றை தளித்து ஊற்றினால் சுவையான, ஆரோக்கியமான நிலக்கடலை சட்னி தயார்..
Read more: இனி பாலில் இந்த பொடியை கலந்து குடிங்க, ஆரோக்கியம் மட்டும் இல்லாமல், அழகும் கூடும்..