fbpx

இந்த ஒரு பால் போதும், எந்த வைரஸ் பரவினாலும் உங்களுக்கு வராது!!!

பொதுவான உடல்நலப் பிரச்சனைகளை சமாளிக்கும் திறன் எப்போதும் ஜாதிக்காய்க்கு உண்டு. இரவில் சரியான தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் அநேகர் தற்போது மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று மாத்திரை சாப்பிடுவது உண்டு. ஆனால் அது முற்றிலும் தவறு. உங்கள் உடலில், அந்த மாத்திரைகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு ஜாதிக்காய் பால் கட்டாயம் உதவும்!

மிரிஸ்டிசின் மற்றும் சஃப்ரோல் ஆகியவை ஜாதிக்காயில் உள்ளது. இதனால் இரவில் நீங்கள் இதை எடுத்துக்கொள்ளும் போது, உங்கள் நரம்புகளை தளர்த்தி, நல்ல தூக்கத்தை ஊக்குவிக்கும். பாரம்பரியமாக இந்த வழிமுறையை தான் தூக்கமின்மை அல்லது அமைதியின்மைக்கு பின் பற்றுகின்றனர். இது மட்டும் இல்லாமல், ஜாதிக்காய் பால் செரிமானத்திற்கு பெரிதும் உதவும்.

வாயு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வு அளிக்கும். ஜாதிக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இதனால் இந்த ஜாதிக்காய் பால், உங்கள் கல்லீரலை சுத்தமாக வைத்திருக்க உதவும். மேலும், இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இதற்கு நீங்கள், பாலில் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் பொடி சேர்த்து குடித்தால் போதும், காலப்போக்கில் இயற்கையாகவே உங்கள் உடல் நச்சுத்தன்மையை நீக்க உதவும்.

பருவகால மாற்றங்களின் போது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது கட்டாயம். அந்த வகையில், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த ஜாதிக்காய் பெரிதும் உதவும். ஏனென்றால், அதில் மெக்னீசியம், கால்சியம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் உள்ளது. ஜாதிக்காயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், மூட்டு வலி மற்றும் தசை வலிகளுக்கு இது சிறந்த நிவாரணம் அளிக்கும்.

மேலும், இந்த ஜாதிக்காய் பாலை தொடர்ந்து குடிப்பதால், மன அழுத்தம் மற்றும் டென்ஷனால் ஏற்படும் தலைவலியையும் குறைக்கலாம். இந்த ஜாதிக்காய் பால் தயாரிக்க, ஒரு கப் பாலை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் கொதிக்கும் பாலில், ¼ தேக்கரண்டி ஜாதிக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். அவ்வளவு தான் ரெடி. இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன், இதை நன்றாக வடிகட்டி, சூடாகப் பருகவும்.

Read more: அழுக்கான உங்கள் பழைய டீ வடிகட்டியை புதுசு போல் மாற்ற வேண்டுமா? அப்போ சட்டுன்னு இதை செய்யுங்க..

English Summary

health benefits of jaiphal powder

Next Post

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு..!! அதிரடியாக வரப்போகும் புதிய விதிமுறைகள்..!! செலவு வைக்கப்போகும் மத்திய அரசு..!!

Wed Jan 29 , 2025
It is said that the central government is going to introduce new rules that will require petrol and diesel to be available at petrol pumps only if you have proper insurance.

You May Like